Tuesday, April 28, 2020

கேரளத்தின் 108 சிவாலயங்கள்

கேரளத்தின் 108 சிவாலயங்கள்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

பரசுராமர், பரமேஸ்வரனின்
சிஷ்யன் ஆகவும் பக்தனாகவும் விளங்கினார். ஈசனின் அனுகிரகத்தால் பரசு என்று சொல்லக்கூடிய கோடாலியைப் பெற்று, அதன்மூலம் பார்க்கவ ராமனாக இருந்தவர் பரசுராமன் ஆக மாறினார்.

21 தலைமுறை க்ஷத்ரியர்களை வதம் செய்த தோஷத்திலிருந்து விடுபட வேண்டி, பரமசிவனை பூஜித்து தான் வென்றெடுத்த மொத்த பூமியையும் காச்யபருக்கு தானமாக கொடுத்தார்.

பின்னர் தனக்கென கேரள ராஜ்யத்தை உருவாக்கிய பிறகு அங்கே பிரதான ஆராதனா தேவதையாக பரமேஸ்வரனை
ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து 108 சிவாலயங்களை உருவாக்க எண்ணினார்.

ஏற்கனவே துர்க்காலயங்களையும், சாஸ்தா ஆலயங்களையும் உருவாக்கிய பரசுராமர்,
கேரள ஆராதனா முறைகளில் பரம புருஷனாக பரமேஸ்வரனை விதித்து அவரது 108 ஆலயங்களையும் பிரதிஷ்டை செய்தார்.

108 துர்கா ஆலயங்களை போலவே 108 சிவ ஆலயங்களுக்கும் வரிசைப்படுத்தும் ஒரு துதி உண்டு.
துர்காலய துதி போல இதை அனுதினமும் பாடாவிட்டாலும்,
பல சிவபக்தர்கள் இதை தொடர்ந்து பாராயணம் செய்துதான் வருகிறார்கள்.

நாம் ஏற்கனவே கண்ட துர்காலய ஸ்துதி போலவே, இந்த சிவாலய ஸ்துதியும், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவாலயங்களை வரிசைப் படுத்துகிறது.

(வைக்கம், ஏற்றுமானூர், தளிப்பறம்பா போன்ற பிரபலமான சிவ க்ஷேத்திரங்கள் இதில் வரிசைப்படுத்த படுவதுடன்,
கொடுங்கல்லூர்,
திருமாந்நாம்குந்நு
போன்ற பகவதியின் பெயரால் இன்று பிரபலமாக அறியப்படும் தலங்களும் கூட
ஆதியில் சிவாலயங்களே என்பதை இந்த வரிசை உறுதிப்படுத்துகிறது. -V. அரவிந்த் ஸுப்ரமண்யம்)

வடக்கே கோகர்ணத்தையும்
தெற்கே சுசீந்திரத்தையும் இந்த வரிசையில் இணைத்து இருப்பதை நாம் பார்க்க முடியும்.

இந்தப் பாடலுக்கும் பலச்ருதி இருக்கிறது.

இப்பறஞ்சவ நூற்றியெட்டும் பக்தியொத்து படிக்குவோர்
தேஹம் நசிக்கிலெத்தீடும் மஹாதேவன்டெ சன்னிதெள

துர்க்கையின் பாடலில் ஆயுள் ஆரோக்கியம் புத்திர சந்தானம் போன்றவை எல்லாம் வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், இங்கே ஞான மூர்த்தியான ஈஸ்வரனின் பாடல் என்பதால், தெளிவாக
இதை பக்தியோடு படிப்பவர்கள்
தங்கள் ஆயுள் முடிந்ததும் நேரடியாக சிவனின் சந்நிதானத்தை அடைவார்கள் என்று கூறி
விட்டார்கள்.

பிரதோஷத்தில் ஜபிச்சாகிலசேஷதுரிதம் கெடும்
யத்ர யத்ர சிவக்ஷேத்ரம் தத்ர தத்ர நமாம்யஹம்

பிரதோஷ காலத்தில் இதைப் படிப்பதால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்குகிறது. இந்த 108 மட்டுமல்லாமல், வேறு எங்கெல்லாம் சிவ க்ஷேத்திரங்கள் இருக்கிறதோ அவை எல்லாவற்றுக்கும் வணக்கம் என்று கூறி இந்த துதி முடிகிறது.

நூற்றியெட்டு சிவாலயங்கள்

ஸ்ரீமத்தக்ஷிணகைலாசம் ஸ்ரீபேருரு ரவீஸ்வரம்
சுசீந்திரம் சொவ்வரம் மாத்தூர் த்ரிப்ரங்கோட்டதா முண்டையூர்

ஸ்ரீமந்தாம்குன்னு சொவ்வல்லூர் பாணாஞ்சேரி கொரட்டியும்
பொராண்டக்காட்டு செங்கன்னூர் கொல்லூரும் திருமங்கலம்

திருகாரியூர் குன்னப்ரம் ஸ்ரீவெள்ளூர்அஷ்டமங்கலம்
ஐராணிக்குளவும் கைநூர் கோகர்ணம் எறணாகுளம்

பாரிவாலூரடாட்டூம் நல்பரப்பில் சாத்தமங்கலம்
பாராபரம்பு திருக்கூரு பனையூரு வயட்டில

வைக்கம் ராமேஸ்வரம் மற்றும் எட்டுமானூர் எடக்கோளம்
ச்செம்மந்தட்டாலுவா பின்னே திருமிட்டக்கோட்டு சேர்தலா

கல்லாட்டுப்புழா திருகுன்னு செருவதூரு பொங்கணம்
திருக்கபாலேஸ்வரம் முன்னுமவிட்டத்தூர் பெரும்மலா

கொல்லத்தும் காட்டகம்பாலா பழையன்னூர் பேரகம்
ஆதம்பள்யேர் அம்பளிக்காடு சேராநெல்லூர் மாணியூர்

தளிம்பாலும் கொடுங்கல்லூர் வஞ்சியூர் வஞ்சுளேஸ்வரம்
பாஞ்சார்குளம் சிட்டுகுளம் ஆலத்தூரத கொட்டியூர்

திருப்பாளூர் பெருந்தட்டா திருத்தாலா திருவல்லயும்
வாழப்பள்ளி புதுப்பள்ளி மங்கலம் திருநக்கரா

கொடும்பூர் அஷ்டமிக்கோவில் பட்டணிக்காட்டு நஷ்டயில்
கிள்ளிகுரிசியும் புத்தூர் கும்பசம்பவமந்திரம்

சோமேஸ்வரஞ்சவெங்காலூர் கொட்டாரக்கர கண்டியூர்
பாலையூர் மஹாதேவநல்லூரத நெடும்பூரா

மண்ணூர் திருச்சளியூர் ஷ்ரிங்கபுரம் கொட்டூரு மம்மியூர்
பறம்புந்தள்ளி திருநாவாய்க்கரீக்காட்டு தென்மலா

கோட்டப்புறம் முதுவரவளப்பாய் சேந்தமங்கலம்
திருக்கண்டியூர் பெறுவனம் திருவால்லூர் சிறைக்கலும்

பலச்ருதி:

இப்பறஞ்சவ நூற்றியெட்டு பக்தியொத்து படிக்குவோர்
தேஹம் நசிக்கிலெத்தீடும் மஹாதேவன்டெ சன்னிதெள

பிரதோஷத்தில் ஜபிச்சாகிலசேஷதுரிதம் கெடும்
யத்ர யத்ர சிவக்ஷேத்ரம் தத்ர தத்ர நமாம்யஹம்

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

Spl Thanks to : Ramesh Anna who gave the text

Super Thanks to Raju and Abhishek Ramanarayanan who transliterated the Malayalam script to Tamil.

ஆதார சக்ரங்களில் அம்பிகையின் தரிசனம்

ஆதார சக்ரங்களில் அம்பிகையின் தரிசனம்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஸ்ரீ மஹாசாஸ்தாவின் ஆறு ஆதாரத் தலங்களைப் பற்றியும், ஸுப்ரமண்யரின் சக்ர தலங்களைப் பற்றியும் நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதேபோல் அம்பிகைக்கு ஆறு ஆதார க்ஷேத்ரங்கள் அமைந்திருப்பது பலரும் அறியாத உண்மை.
இந்த வரிசை பலரும் அறியாதது. பரம ரகசியமானது !

இங்கு நாம் காணும் திருத்தலங்கள் எல்லாமே பிரபலமான சிவக்ஷேத்திரங்களாக விளங்குவதைக் காணலாம்.
சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: என்னும்படி அந்த சிவம் வெளிப்படையாகத் தெரிந்தாலும், அவனை இயக்கும் ஆதார சக்தி அந்த ஆதிசக்தியே என்னும் சூட்சுமமே இதன் சாரம். அதனால் தான் அம்பிகையின் ஆட்சி பீடங்களாக இந்த தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.. இதை யாரோ சாமான்யர் சொல்லவில்லை.

அம்பிகையே இந்த ரகசியத்தை தக்ஷிணாமூர்த்தியிடம் வெளிப்படுத்தினாள். கர்ப்ப குலார்ணவம் என்ற தந்திர நூலில், ஸாக்ஷாத் பரமசிவனே, ஆனந்த பைரவராகத் தோன்றி, அம்பிகையின் இந்த அபூர்வ ரகஸ்யத்தை வெளிப்படுத்தியுள்ளார். அம்பிகை இந்த ஆதார சக்ரங்களில் கோவில்கொண்டு அவளே அகத்தே குண்டலினியாகவும் புறத்தே தேவதையாகவும் விளங்கி நிற்கும் நிலை அற்புதமானது.

அதன்படி இந்த ஒவ்வொரு திருத்தலங்களும் அம்பிகையின் மகத்துவத்தை, அம்பிகையின் வைபவத்தை, அம்பிகையின் தத்துவத்தை உணர்த்தக்கூடிய தலங்களாக இருக்கின்றன.

அம்பிகையின் ஸ்தூல வடிவத்தை இந்த ஆலயத்தில் தரிசிக்கிறோம், அவளது மந்திரமே ஸூக்ஷ்ம வடிவம்.. அவளது ஸூக்ஷ்மதம ரூபம் குண்டலினி வடிவம். குண்டலினி என்பது நம்முள் புதைந்திருக்கும் ஒரு புதையல்...

யத ப்ரஹ்மாண்டே தத பிண்டாண்டே
யத பிண்டாண்டே தத ப்ரஹ்மாண்டே

ப்ரபஞ்சமாகிய ப்ரம்மாண்டத்தில் இருப்பதுவே, மனித சரீரம் எனும் பிண்டாண்டத்திலும் இருக்கிறது. இவ்வுலகைப் படைத்த சிவ-சக்தி மயமான ப்ரப்ரம்மமே அதன் படைப்புக்களெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த சைதன்யமான பராசக்தி நம் உடலில் குண்டலினீ சக்தியாக ஸுஷும்னா எனும் நாடியின் அடியில் ஸர்ப்பம் போல மூன்றரை சுற்று, சுருண்டு கிடக்கிறாள்.

முதுகெலும்பான மேரு தண்டத்தின் வழியே ஸுஷும்னா நாடி செல்கிறது. அதன் அடியிலிருந்து நுனி வரை ஆறு சக்ரங்கள் இருக்கின்றன.

ப்ராண வாயுவை நாம் இடகலை பிங்கலை வழியாக செலுத்தி விரயம் செய்கிறோம். அதனை ஸுஷும்னா வழி செல்லுமாறு செய்தால் ஆறு ஆதார சக்ரங்களும் திறக்கும்.

"ஆறாதார அங்குச நிலையை பேறு நிறுத்திய பேச்சுரையறுத்தே" என்கிறார் ஔவையார். இந்த ஆறு ஆதாரங்களும் ஸூக்ஷ்ம உடலைச் சேர்ந்தவை.

இந்த நிலை யோக மார்க்கமாகவும், பாவனா மார்க்கமாகவும் ஸித்திக்கும். இதுவே உபாஸனையின் முடிவு; இதை நிலையாக அடைந்தவுடன் ஜீவன் முக்தி ஸித்திக்கும். இந்த நிலையை அடைந்தவர் மீண்டும் உலகியல் வாழ்வில் ஸம்பந்தம் இல்லாமல் அம்பிகையின் ப்ரம்மானந்தத்திலேயே திளைத்தவராக வாழ்வர்.

நம் உடலின் ஆதார சக்ரங்களும் அவற்றின் ஸ்தானங்களும்:

மூலாதாரம் முதுகெலும்பின் முடிவில் - ஆசன த்வாரத்தின் அருகில்

ஸ்வாதிஷ்டானம் நாபிக்கும் மூலாதாரத்துக்கும் நடுவில்

மணிபூரகம் நாபியின் பின்னால்

அனாகதம் இதயத்தின் பின்னால்

விசுத்தி தொண்டையின் பின்னால் - கழுத்துப் பகுதி

ஆஞ்ஞா புருவ மத்தியின் பின்னால்

ஸஹஸ்ராரம் தலை உச்சி

த்வாதசாந்தம் - ஆக்ஞா சக்ரத்திலிருந்து 12 அங்குல் உயரத்தில் உள்ளது

ஷோடசாந்தம் – ப்ரம்மரந்த்ரத்திலிருந்து ஆறு அங்குல உயரத்தில் உள்ளது

சூட்சும சரீரத்தில் அனுபவிப்பதே குண்டலினி யோகம் ஆன்ம ஸாதனையில், யோக நிஷ்டையில் நாம் அடையும் ஆனந்தத்தை– புறத்தே ஸ்தூல சரீரத்தில் கண்ணாரக் கண்டு உணரவே அம்பிகை இந்த ஆலயங்களில் குடி கொண்டாள்.

அம்பிகை தன்னிடம் உரைத்த ரகசியத்தை ஈசன் உடைத்து உரைக்கிறார்: :

வல்மீகபுர மத்யஸ்தா ஜம்பூ வன நிவாஸினி |
அருணாசல ச்ருங்கஸ்தா வ்யாக்ராலய நிவாஸினி ||
ஸ்ரீ காளஹஸ்தி நிலையா காசீபுர நிவாஸினி |
ஸ்ரீமத் கைலாச நிலயா த்வாதசாந்த மஹேச்வரி ||
ஸ்ரீ ஷோடசாந்த் மத்யஸ்தா ஸர்வ வேதாந்த லக்ஷிதா |

என்று அவள் ஒவ்வொரு சக்ரத்துக்கும் எங்கே கோவில் கொண்டுள்ளாள் என்று ஆனந்த பைரவர் விவரிக்கிறார்.

மூலாதாரம் – அனைத்துக்கும் ஆதாரமான கமல மொட்டினை தன் தவத்தால் மலரவைக்கும் கமலாம்பாள் : திருவாரூர்

ஸ்வாதிஷ்டானம் – ஸ்வ அதிஷ்டானம் என்று அகிலத்தையே தன் இடமாக ஆட்சி புரியும் அகிலாண்ட நாயகி : திருவானைக்கா

மணிபுரகம் – பேரொளி பொருந்திய ரத்தினமென ஜோதிஸ்தலத்தில் ஸ்வயம் ஜோதியாக ஒளிரும் அபீதகுசாம்பிகை : திருவண்ணாமலை

அநாஹதம் - ஹ்ருதாகாசத்தை தன் வசப்படுத்தி ஆடாதாரை ஆட்டுவிக்கும் சிவகாமசுந்தரி : சிதம்பரம்

விசுத்தி - அக்ஞான குப்பையை சுத்தி செய்து ஞானப் பூங்காற்றாய் வருடும் ஞானப்ரஸூனாம்பிகை :திருக்காளத்தி

ஆக்ஞா - மோக்ஷம் எனும் வீட்டுக்கு அழைத்து, அமுதூட்டி அனுப்பிவைக்கும் அன்னபூரணி : காசி

ஸஹஸ்ராரம் - ஸகல தத்துவங்களையும் கடந்த ஞானவெளியில் தானே நாமாகி வியாபித்து விளங்கும் உமா மஹேச்வரி : திருக்கயிலாயம்

த்வாதசாந்தம் – ஸாக்ஷாத் ஸ்ரீமஹாராக்ஞியாக விளங்கி அருளாட்சி செய்யும் மதுரை மீனாக்ஷி

ஷோடசாந்தம் – மனம் நாசம் அடையும் ஷோடசாந்தம் ஸர்வமுமாகி நிற்கும் ஸ்ரீ காமாக்ஷி மஹாத்ரிபுர ஸுந்தரி

(இதைக் குறித்து ஏற்கனவே ஒரு சிறிய நூல் ஞான ஆலயம் பத்திரிக்கைக்காக என்னால் எழுதப்பட்டது. அதை இன்னும் விரிவாக்கி முழு நூலாக்க ஆசை உள்ளது. அதை அம்பிகை அருள் கூட்டுவிக்க வேண்டும் – அரவிந்த் ஸுப்ரமண்யம்)

இந்த க்ஷேத்திரங்களிலெல்லாம் ஒரு ஸாதகன் தரிசனம் செய்யும் போது, அவனையும் அறியாமல் ஓர் அகப்பயணம் நடைபெறுகிறது. ஸாதகன் சிவனையும், சிவனோடிணைந்த சக்தியையும் உணர்கிறான். இப்பொழுது ஸாதகனுக்கு, இரண்டும் ஒன்றே' என்று புரிய ஆரம்பிக்கிறது. 'ஒன்றை விட்டு இன்னொன்று தனியாக இயங்குவதில்லை' என்பதும் நன்கு விளங்குகிறது. இந்த உயரிய நிலையில், அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத பாவம் அனுபவமாகிறது.

ஸாதகன் தன்னையே சிவமாக, சக்தியாக உணர்ந்த பின் அவனுக்கு ஜனன, மரணம் என்பது இல்லை. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் மட்டுமே !

ஸர்வம் சக்தி மயம் ! அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்

V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

நடராஜ தத்துவம்

நடராஜ தத்துவம்
அரவிந்த் ஸுப்ரமண்யம்

அம்மையும் அப்பனும் பிரிக்கமுடியாத சக்திகள்.
கதிரவனும் ஒளியும் போல்
அரணியும் அக்னியும் போல்
சொல்லும் பொருளும் போல்
சிவமும் சக்தியும் ஒன்றுக்குள் ஒன்று இணைந்திருப்பது.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது எவ்வளவு சத்தியமோ, அதேபோல் சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்பதும் சத்தியம்.

படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலையும் செய்யும் லலிதையைப் போற்றுகிறது லலிதா ஸஹஸ்ரநாமம். அதே பஞ்ச க்ருத்யங்களையும் செய்யும் பரம்பொருள் வடிவமே நடராசனின்
தாண்டவத்திருக்கோலம்.

இதையே தான் பஞ்ச க்ருத்ய பராயணா என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம். நடராஜ ராஜனின் தாண்டவத்தை மஹேஸ்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷிணி என்று சொல்கிறது.

சிவ-சக்தி ஐக்ய வடிவமே சிதம்பரத்தின் சிறப்பு.

சிதம்பர ஸ்தலத்தின், மிக முக்யமான வழிபாடு ஸம்மேளன அர்ச்சனை என்று சிதம்பர ரகசிய கல்பம் சொல்கிறது. ஸ்ரீ நடராஜ மூர்த்தியையும், சிவகாம சுந்தரியையும் சேர்த்தே வழிபடுவதே ஸம்மேளன அர்ச்சனை.

ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரீ என்று லலிதையின் ஸஹஸ்ரம் துவங்குவது போலவே, ஸ்ரீசிவ ஸ்ரீசிவாநாத ஸ்ரீமாந் ஸ்ரீபதிபூஜித என்று சபாபதியின் ஸஹஸ்ரநாமமும் ஸ்ரீ என்ற மந்த்ர ஒலியிலேயே துவங்குகிறது.

(இது போல சிவமும் சக்தியும், பின்னிப்பிணைந்திருக்கும் ரஹஸ்ய தத்துவங்களே சிதம்பர ரஹஸ்யம். அது இன்னும் நிறைய உண்டு. பொதுவெளியில் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன் - அரவிந்த் ஸுப்ரமண்யம்)

மகா பெரியவருக்கு அதனாலேயே நடராஜப் பெருமானிடம் பக்தி கூடுதல். அதிலும் குஞ்சிதபாதம் என்று சொல்லக்கூடியது தூக்கிய திருவடியின் மேல் சாற்றிய
பிரசாதங்களை அதீத பக்தியோடு ஸ்வீகரிப்பார்.

அந்த தூக்கிய திருவடியான குஞ்சித பாதத்திற்கு குஞ்சிதாங்க்ரிஸ்தவம் என்றே ஸ்ரீஉமாபதி சிவம் தனியாக ஸ்தோத்திரமே செய்திருக்கிறார்.

ஆனந்த நடனம் செய்யும் நடராஜ ராஜப் பெருமானின் ஸ்வரூபமே தனிப்பெரும் தத்துவ வடிவம்.

கையில் உள்ள உடுக்கை ச்ருஷ்டி தத்துவம்; அபயம் காட்ட கூடிய கை ஸ்திதி தத்துவம்; அக்னி சம்ஹார தத்துவம்; காலில் போட்டு மிதிக்கும் முயலகன் மறைந்திருக்கும் திரோதானம்; கீழே சுட்டிக்காட்டும் இடதுகையே அனுக்கிரகம்.

அந்த அனுக்ரஹம் செய்யும் இடது கை, குஞ்சித பாதம் என்னும் இடதுகாலைச் சுட்டிக் காட்டுகிறது.

ஸ்ரீகண்டார்த்த சரீரிணி என்றல்லவா
அம்பிகை விளங்குகிறாள் ? சிவபெருமானின் நேர் பாதி அவளேயல்லவா?

எனவே நடராஜப்பெருமானின் தூக்கிய இடது திருவடி அம்பிகைக்கு உரியது. அந்த திருவடியே மோட்சத்துக்கு கதி என்பதை நடராஜ தத்துவம் உணர்த்துகிறது.

இதையேதான் ஸ்ரீவித்யா தத்துவத்தில் குரு பாதுகை என்றும், அதுவே அர்த்தநாரீஸ்வர பாதுகை என்றும் உணர்த்தப்படுகிறது.

அதனால்தான் காமக் கோட்டத்தில் உரையும் சிவகாமசுந்தரியை
ஸாக்ஷாத் த்ரிபுரசுந்தரி
என்றே ஞானிகள் போற்றுகிறார்கள்

சிவ சக்தி தத்துவ ஸம்மேளனமே சிதம்பர தத்துவம்!

சிவசக்த்யைக்ய ரூபிணி லலிதாம்பிகா
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

நூத்தியெட்டு துர்கா ஆலயங்கள்

நூத்தியெட்டு துர்கா ஆலயங்கள் 

கேரளத்தின் நூற்றியெட்டு துர்காலயங்கள்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

வழக்கமாக
சம்ஸ்கிருத ஸ்துதிகளையும்
தமிழ் பாடல்களையும் பார்க்கும் நாம் இன்று வித்தியாசமாக ஒரு மலையாள துதியை பற்றி அறிய முயல்வோம்.

ஸாக்ஷாத் மஹா விஷ்ணுவின் அவதாரமாகவும்
பரமேஸ்வரனின் நேரடியான சீடனாகவும் விளங்கிய பரசுராமர்
க்ஷத்திரிய நிக்ரஹ பாப நிவர்த்திக்காக
தான் வென்றெடுத்த பூமி அத்தனையும் அந்தணர்களுக்கு தானம் கொடுத்துவிட்டு
தனக்காக சொந்தமாக ஒரு பூமியை உருவாக்க எண்ணினார்.

கோகர்ண க்ஷேத்திரத்தில்
கடலரசனை நோக்கி கடும் தவமிருந்து தனக்கென நிலம் ஒதுக்குமாறு வேண்டினார்.
"நாராயணனின் அவதாரமான பரசுராமருக்கு நான் எப்படி நிலம் கொடுப்பது அதனால் நீங்கள் உங்கள் கோடாலியை விட்டு எறியுங்கள் அதனால் கடல் எவ்வளவு தூரம் பின்வாங்குகிறதோ, அவ்வளவு தூரம் நான் உங்களுக்கு தருகிறேன்" என்று வருணன் சத்தியம் செய்தார்.

அதன்படி கோகர்ணத்திலிருந்து பரசுராமர் வீசி எறிந்த
கோடாலி கன்னியாகுமரி வரை கடலை பின்வாங்கியது.

பரசுராமர் இந்த பகுதியில் 64 கிராமங்களாக அதைப் பிரித்து அந்தணர்களை குடியேற்றினார்.
அதில் 32 கிராமங்கள்
துளு தேசம் என்று சொல்லப்படும் கோகர்ணம் முதல் பெரும்புழை வரையிலான கிராமங்களாகவும்,
மீதி 32 மலையாளம் பேசக்கூடிய தேசம் என்று சொல்லப்படக்கூடிய பெரும்புழை முதல் கன்னியாகுமரி வரையிலான கிராமங்களாக விளங்கியது. (இன்று சில பகுதி கர்நாடகத்திலும் தமிழகத்திலும் இருக்கிறது)

பிரம்மாண்ட புராணத்தைச் சேர்ந்த கேரள கல்பத்திலும், கேரளோத்பத்தியிலும் இந்த தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

தனக்கென ஓர் பூமியை உருவாக்கிய பின் பரசுராமர் அந்த பூமியின் க்ஷேமத்துக்காக 108 துர்க்கை ஆலயங்களைப் பிரதிஷ்டை செய்தார்.

வடகோடியில்
கோகர்ண ஷேத்திரம் முதல் தென்கோடியில் கன்னியாகுமரியில் துவங்கிய பரசுராமரின் பிரதிஷ்டை வடகோடியில் கோகர்ணம் வரை நீண்டது.

108 துர்க்காலய ஸ்துதி என்ற தோத்திரத்தை கேரள மக்கள் அனுதினமும் சாயங்கால வேளையில் விளக்கேற்றி விட்டு சொல்கிறார்கள். இந்தத் தோத்திரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்துள்ள 108 துர்காலயங்கள் என்று வரிசைப்படுத்தி போற்றுகிறார்கள்.
மலையாளமும் ஸம்ஸ்க்ருதமும் கலந்து இருக்கக்கூடிய மணிப்பிரவாளமாக இந்த ஸ்தோத்திரம் அமைந்திருக்கிறது.

இந்த ஸ்தோத்திரத்தை சொல்வதாலும்
108 க்ஷேத்திரத்தில் மானசீகமாக தரிசித்த பலன் கிடைக்கிறது.

"துர்காலயங்கள் நூற்றெட்டும் துஷ்க்ருதம் தூர நீங்ஙுவான்
துக்கம் போக்கேணம் வணங்ஙுன்னே
துர்கா தேவி நமோஸ்துதே"

"வலயாலயம் ஆதிக்கும் தைக்காடும் கடலாடியும்
கன்யாகுமாரி காமாக்ஷி மூகாம்பி செறுகுன்னிலும்"

எனத் துவங்கும் அந்த ஸ்தோத்திரம், வலயாலயம் என்று கூறப்படும் ஊரகத்து அம்மா என்ற காமாக்ஷி தேவியின் ஆலயத்தை (திரிச்சூர்) முதல் கோவிலாகக் கொண்டு இந்தத் துதி துவங்குகிறது.

ஐலூர் உளியந்நூர் புதுக்கோடும் கடலுண்டியும் என பாலக்காட்டிலுள்ள எங்கள் குலதேவதையான புதுக்கோடு பகவதியையும் சொல்கிறத.

(சோட்டானிக்கரை, செறுகுந்நு, புதுக்கோடு போன்ற பல பிரபலமான தலங்களில் காமாக்ஷி, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, அன்னபூரணி என்றெல்லாம் சொல்லப்படும் தேவதைகள்
மூலத்தில் துர்கா ஸ்வரூபமே என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். இந்த துர்க்காலய வரிசை அதை உறுதி செய்கிறது - அரவிந்த் ஸுப்ரமண்யம்)

108 கோவிலையும் சொன்ன பிறகு இந்த விசேஷமான திருத்தலங்களில் எந்தெந்த நாட்களில் தரிசித்தால் / இந்தத் துதியைச் சொன்னால் என்னென்ன விதமான பலன் கிடைக்கும் என்பதையும் இந்த பாடல் சொல்கிறது.

"அஷ்டமி கார்த்திகை செவ்வா
நவமி வெள்ளியாழ்ச்சயும் பதினாலும் திங்கள் முதலாகும் சந்த்யாகாலே விசேஷதா"

அஷ்டமியும் நவமியும் சதுர்தசியிலும், கார்த்திகை நட்சத்திரத்திலும்
செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தரிசித்தல் விசேஷம்.

"ஆதூரன்மார் ஜபிச்சீடேல் ஆரோக்யம் உளவாய் வரும்
கர்ப்பம் உள்ளவோர் ஜபிச்சீடேல் சத்புத்ரன் உளவாய் வரும்"

நோயுள்ளவர் இதை ஜெபித்தால் நோய் ஆரோக்கியம் வரும் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் இதை ஜபித்தால் நல் புத்திரப்பேறு கிடைக்கும்.

"மங்கல்ய ஸ்த்ரீ என்னாகில் நல்குந்நு நெடுமங்களம் ஆயுஸ்ஸு சிசுக்கள்கு முக்தி நல்குன்னு வ்ருத்தனும்"

சுவாசினிகளான பெண்களுக்கு
தீர்க்கசுமங்கலி பாக்யத்தையும்,
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும்,
வாழ்ந்து முடித்தவர்களுக்கு மோட்சத்தையும் கொடுக்கும்.

பூத பிரேத பிசாசுகளின் தொல்லை இதை ஜபித்தால் நீங்கிவிடும்.
வறுமையும் பயமும் துக்கமும் ஆபத்து நீங்கி என்றென்றும்
துர்காதேவி காப்பார்.

"பூத ப்ரேத பிசாசுக்கள் ஜபிச்சால் அகலும் துலோம்
தாரித்ர்ய பய துக்கங்கள் ஆபத்துக்கள் அனர்த்தவும் நீக்கி ரக்ஷிக்கும் என் அம்மா

துர்க்கா தேவி நமோஸ்துதே"

அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் !

பக்தபரிபால பாத ரேணு
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

108 துர்காலய ஸ்துதி 

துர்கா ஆலயங்கள் நூத்தியெட்டும்
துஷ்க்ருதம் தூரே நீங்குவான் 
பேருச்சொல்லி ஸ்துதிக்குன்னே 
ஸ்ரீ துர்காதேவி நமோஸ்துதே 

வலையாலயமாதிக்கும் தைக்காடும் கடலாயிலும் 
கன்னியாகுமாரி காமாக்ஷி மூகாம்பி செருகுன்னிலும் 

குமாரநெல்லூர் காவீடு சேறாநெல்லூறு செங்களம்
தொட்டிப்பள்ளி இடப்பள்ளி பேர்க்காவு மயில்புரம் 

வெள்ளித் தட்டழகத்தென்னும் சாத்தன்னூர் நெல்லுவாயிலும்
அந்திக்காடாவணம் கோடு ஐயந்தோள் அய்யகுன்னிலும் 

கடப்பூருழலூர் என்னும் சொல்லாம் புன்னரியம்மையும் 
காரமுக்கு மிடக்குன்னி செம்புக்காவீட நாடுமே 

பூவத்திசேரி சேர்ப்பேன்னும் குட்டநல்லூர் சேர்த்தல
வெள்ளிக்குன்னென்னு சொல்லுன்னு வேண்டூர் மாணிக்யமங்கலம்

விளப்பா வெளியென்னூறும் வெளியம் கொடுவிடக்கொடி
ஈங்கயூருமிடப்பெட்ட கட்டலும் கருமாப்புறம் 

சொல்லாம் கைவாலயம்புத்தூர் ஆரூர் செங்கணக்குன்னிவ
போத்தனூர் உளியன்னூர் பந்தலூர் பன்னியங்கரா 

மருதூர் மறவஞ்சேரி ஞாங்காரிடப கண்ணனூர் 

காட்டூர் பிஷாரி சிட்டண்டா சோட்டானிக்கற ரெண்டிலும்
ஆயிறூறிடயன்னூறும் புதுக்கோடு கடலுண்டியும் 

திரக்குளம் கிடங்கேத்து விரங்காட்டூர் ஷிரஸ்ஸிலும் 
பேச்செங்கணூர் மாங்கட்டூர் தத்தபிள்ளி வரக்கலும்

கரிங்காச்சிரா  செங்கன்னூர் தொழான்னூர் கொரட்டியும்
தேவலக்கோடு இளம்பாரா குறிஞ்சிக்காட்டு காறையில் 

த்ரிக்கணிக்காடு மயிலே உண்ணூர் மங்கலம் என்னிவ
தெச்சிக்கோட்டோலா முக்கோலா பக்தியால் பக்திஷாலையும் 

கிழக்கனிக்காடழியூர் வள்ளூர் வணோடிகுன்னிவா
பத்தியூர் திருவாலத்தூர் சுரக்கோடென்ன கிழடூர் 

இரிங்கோளம் கடம்பேரி த்ரிச்சம்பரமிதாதரால்
மேழக்குன்னத்து மாவட்டூர் த்ரிப்பளேரிகளம்பிலும் 

ருணநாராயணம் நல்லூர் கிரமத்தால் சாலரண்டிலும்

அஷ்டமீ கார்த்திக செவ்வா நவமி வெள்ளியாழ்ச்சயும் 

பதினாலும் திங்கள் முதல் ஸந்த்யாகாலே விசேஷிதம்

ஆதுரன்மார் ஜபிச்சீடில்
ஆரோக்யம் உளவாய் வரும்
கர்ப்பமுள்ளோர் ஜபிச்சீடில்
 சல்புத்ரன் உளவாய்வரும் 

ஆயுஸ்சின்னும் சிசுக்கள்க்கும் பக்திவர்தன நல்குமே 
பூதப்ரேத பிசாசுக்கள் ஜபிச்சால் அகலும் துலோம் 

தாரித்ரிய பய துக்கங்கள் 
ஆபத்துகளநர்த்தவும்
நீக்கி ரக்ஷிக்க என்னம்மே 
ஸ்ரீ துர்காதேவி நமோஸ்துதே