நூத்தியெட்டு துர்கா ஆலயங்கள்
கேரளத்தின் நூற்றியெட்டு துர்காலயங்கள்
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்
வழக்கமாக
சம்ஸ்கிருத ஸ்துதிகளையும்
தமிழ் பாடல்களையும் பார்க்கும் நாம் இன்று வித்தியாசமாக ஒரு மலையாள துதியை பற்றி அறிய முயல்வோம்.
ஸாக்ஷாத் மஹா விஷ்ணுவின் அவதாரமாகவும்
பரமேஸ்வரனின் நேரடியான சீடனாகவும் விளங்கிய பரசுராமர்
க்ஷத்திரிய நிக்ரஹ பாப நிவர்த்திக்காக
தான் வென்றெடுத்த பூமி அத்தனையும் அந்தணர்களுக்கு தானம் கொடுத்துவிட்டு
தனக்காக சொந்தமாக ஒரு பூமியை உருவாக்க எண்ணினார்.
கோகர்ண க்ஷேத்திரத்தில்
கடலரசனை நோக்கி கடும் தவமிருந்து தனக்கென நிலம் ஒதுக்குமாறு வேண்டினார்.
"நாராயணனின் அவதாரமான பரசுராமருக்கு நான் எப்படி நிலம் கொடுப்பது அதனால் நீங்கள் உங்கள் கோடாலியை விட்டு எறியுங்கள் அதனால் கடல் எவ்வளவு தூரம் பின்வாங்குகிறதோ, அவ்வளவு தூரம் நான் உங்களுக்கு தருகிறேன்" என்று வருணன் சத்தியம் செய்தார்.
அதன்படி கோகர்ணத்திலிருந்து பரசுராமர் வீசி எறிந்த
கோடாலி கன்னியாகுமரி வரை கடலை பின்வாங்கியது.
பரசுராமர் இந்த பகுதியில் 64 கிராமங்களாக அதைப் பிரித்து அந்தணர்களை குடியேற்றினார்.
அதில் 32 கிராமங்கள்
துளு தேசம் என்று சொல்லப்படும் கோகர்ணம் முதல் பெரும்புழை வரையிலான கிராமங்களாகவும்,
மீதி 32 மலையாளம் பேசக்கூடிய தேசம் என்று சொல்லப்படக்கூடிய பெரும்புழை முதல் கன்னியாகுமரி வரையிலான கிராமங்களாக விளங்கியது. (இன்று சில பகுதி கர்நாடகத்திலும் தமிழகத்திலும் இருக்கிறது)
பிரம்மாண்ட புராணத்தைச் சேர்ந்த கேரள கல்பத்திலும், கேரளோத்பத்தியிலும் இந்த தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
தனக்கென ஓர் பூமியை உருவாக்கிய பின் பரசுராமர் அந்த பூமியின் க்ஷேமத்துக்காக 108 துர்க்கை ஆலயங்களைப் பிரதிஷ்டை செய்தார்.
வடகோடியில்
கோகர்ண ஷேத்திரம் முதல் தென்கோடியில் கன்னியாகுமரியில் துவங்கிய பரசுராமரின் பிரதிஷ்டை வடகோடியில் கோகர்ணம் வரை நீண்டது.
108 துர்க்காலய ஸ்துதி என்ற தோத்திரத்தை கேரள மக்கள் அனுதினமும் சாயங்கால வேளையில் விளக்கேற்றி விட்டு சொல்கிறார்கள். இந்தத் தோத்திரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்துள்ள 108 துர்காலயங்கள் என்று வரிசைப்படுத்தி போற்றுகிறார்கள்.
மலையாளமும் ஸம்ஸ்க்ருதமும் கலந்து இருக்கக்கூடிய மணிப்பிரவாளமாக இந்த ஸ்தோத்திரம் அமைந்திருக்கிறது.
இந்த ஸ்தோத்திரத்தை சொல்வதாலும்
108 க்ஷேத்திரத்தில் மானசீகமாக தரிசித்த பலன் கிடைக்கிறது.
"துர்காலயங்கள் நூற்றெட்டும் துஷ்க்ருதம் தூர நீங்ஙுவான்
துக்கம் போக்கேணம் வணங்ஙுன்னே
துர்கா தேவி நமோஸ்துதே"
"வலயாலயம் ஆதிக்கும் தைக்காடும் கடலாடியும்
கன்யாகுமாரி காமாக்ஷி மூகாம்பி செறுகுன்னிலும்"
எனத் துவங்கும் அந்த ஸ்தோத்திரம், வலயாலயம் என்று கூறப்படும் ஊரகத்து அம்மா என்ற காமாக்ஷி தேவியின் ஆலயத்தை (திரிச்சூர்) முதல் கோவிலாகக் கொண்டு இந்தத் துதி துவங்குகிறது.
ஐலூர் உளியந்நூர் புதுக்கோடும் கடலுண்டியும் என பாலக்காட்டிலுள்ள எங்கள் குலதேவதையான புதுக்கோடு பகவதியையும் சொல்கிறத.
(சோட்டானிக்கரை, செறுகுந்நு, புதுக்கோடு போன்ற பல பிரபலமான தலங்களில் காமாக்ஷி, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, அன்னபூரணி என்றெல்லாம் சொல்லப்படும் தேவதைகள்
மூலத்தில் துர்கா ஸ்வரூபமே என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். இந்த துர்க்காலய வரிசை அதை உறுதி செய்கிறது - அரவிந்த் ஸுப்ரமண்யம்)
108 கோவிலையும் சொன்ன பிறகு இந்த விசேஷமான திருத்தலங்களில் எந்தெந்த நாட்களில் தரிசித்தால் / இந்தத் துதியைச் சொன்னால் என்னென்ன விதமான பலன் கிடைக்கும் என்பதையும் இந்த பாடல் சொல்கிறது.
"அஷ்டமி கார்த்திகை செவ்வா
நவமி வெள்ளியாழ்ச்சயும் பதினாலும் திங்கள் முதலாகும் சந்த்யாகாலே விசேஷதா"
அஷ்டமியும் நவமியும் சதுர்தசியிலும், கார்த்திகை நட்சத்திரத்திலும்
செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தரிசித்தல் விசேஷம்.
"ஆதூரன்மார் ஜபிச்சீடேல் ஆரோக்யம் உளவாய் வரும்
கர்ப்பம் உள்ளவோர் ஜபிச்சீடேல் சத்புத்ரன் உளவாய் வரும்"
நோயுள்ளவர் இதை ஜெபித்தால் நோய் ஆரோக்கியம் வரும் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் இதை ஜபித்தால் நல் புத்திரப்பேறு கிடைக்கும்.
"மங்கல்ய ஸ்த்ரீ என்னாகில் நல்குந்நு நெடுமங்களம் ஆயுஸ்ஸு சிசுக்கள்கு முக்தி நல்குன்னு வ்ருத்தனும்"
சுவாசினிகளான பெண்களுக்கு
தீர்க்கசுமங்கலி பாக்யத்தையும்,
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும்,
வாழ்ந்து முடித்தவர்களுக்கு மோட்சத்தையும் கொடுக்கும்.
பூத பிரேத பிசாசுகளின் தொல்லை இதை ஜபித்தால் நீங்கிவிடும்.
வறுமையும் பயமும் துக்கமும் ஆபத்து நீங்கி என்றென்றும்
துர்காதேவி காப்பார்.
"பூத ப்ரேத பிசாசுக்கள் ஜபிச்சால் அகலும் துலோம்
தாரித்ர்ய பய துக்கங்கள் ஆபத்துக்கள் அனர்த்தவும் நீக்கி ரக்ஷிக்கும் என் அம்மா
துர்க்கா தேவி நமோஸ்துதே"
அம்பிகையை சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் !
பக்தபரிபால பாத ரேணு
V. அரவிந்த் ஸுப்ரமண்யம்
108 துர்காலய ஸ்துதி
துர்கா ஆலயங்கள் நூத்தியெட்டும்
துஷ்க்ருதம் தூரே நீங்குவான்
பேருச்சொல்லி ஸ்துதிக்குன்னே
ஸ்ரீ துர்காதேவி நமோஸ்துதே
வலையாலயமாதிக்கும் தைக்காடும் கடலாயிலும்
கன்னியாகுமாரி காமாக்ஷி மூகாம்பி செருகுன்னிலும்
குமாரநெல்லூர் காவீடு சேறாநெல்லூறு செங்களம்
தொட்டிப்பள்ளி இடப்பள்ளி பேர்க்காவு மயில்புரம்
வெள்ளித் தட்டழகத்தென்னும் சாத்தன்னூர் நெல்லுவாயிலும்
அந்திக்காடாவணம் கோடு ஐயந்தோள் அய்யகுன்னிலும்
கடப்பூருழலூர் என்னும் சொல்லாம் புன்னரியம்மையும்
காரமுக்கு மிடக்குன்னி செம்புக்காவீட நாடுமே
பூவத்திசேரி சேர்ப்பேன்னும் குட்டநல்லூர் சேர்த்தல
வெள்ளிக்குன்னென்னு சொல்லுன்னு வேண்டூர் மாணிக்யமங்கலம்
விளப்பா வெளியென்னூறும் வெளியம் கொடுவிடக்கொடி
ஈங்கயூருமிடப்பெட்ட கட்டலும் கருமாப்புறம்
சொல்லாம் கைவாலயம்புத்தூர் ஆரூர் செங்கணக்குன்னிவ
போத்தனூர் உளியன்னூர் பந்தலூர் பன்னியங்கரா
மருதூர் மறவஞ்சேரி ஞாங்காரிடப கண்ணனூர்
காட்டூர் பிஷாரி சிட்டண்டா சோட்டானிக்கற ரெண்டிலும்
ஆயிறூறிடயன்னூறும் புதுக்கோடு கடலுண்டியும்
திரக்குளம் கிடங்கேத்து விரங்காட்டூர் ஷிரஸ்ஸிலும்
பேச்செங்கணூர் மாங்கட்டூர் தத்தபிள்ளி வரக்கலும்
கரிங்காச்சிரா செங்கன்னூர் தொழான்னூர் கொரட்டியும்
தேவலக்கோடு இளம்பாரா குறிஞ்சிக்காட்டு காறையில்
த்ரிக்கணிக்காடு மயிலே உண்ணூர் மங்கலம் என்னிவ
தெச்சிக்கோட்டோலா முக்கோலா பக்தியால் பக்திஷாலையும்
கிழக்கனிக்காடழியூர் வள்ளூர் வணோடிகுன்னிவா
பத்தியூர் திருவாலத்தூர் சுரக்கோடென்ன கிழடூர்
இரிங்கோளம் கடம்பேரி த்ரிச்சம்பரமிதாதரால்
மேழக்குன்னத்து மாவட்டூர் த்ரிப்பளேரிகளம்பிலும்
ருணநாராயணம் நல்லூர் கிரமத்தால் சாலரண்டிலும்
அஷ்டமீ கார்த்திக செவ்வா நவமி வெள்ளியாழ்ச்சயும்
பதினாலும் திங்கள் முதல் ஸந்த்யாகாலே விசேஷிதம்
ஆதுரன்மார் ஜபிச்சீடில்
ஆரோக்யம் உளவாய் வரும்
கர்ப்பமுள்ளோர் ஜபிச்சீடில்
சல்புத்ரன் உளவாய்வரும்
ஆயுஸ்சின்னும் சிசுக்கள்க்கும் பக்திவர்தன நல்குமே
பூதப்ரேத பிசாசுக்கள் ஜபிச்சால் அகலும் துலோம்
தாரித்ரிய பய துக்கங்கள்
ஆபத்துகளநர்த்தவும்
நீக்கி ரக்ஷிக்க என்னம்மே
ஸ்ரீ துர்காதேவி நமோஸ்துதே
No comments:
Post a Comment