ஸ்ரீ கணேச வேத பாத ஸ்தவம்
ஒவ்வொரு ஸ்லோகத்திலும் ஒரு வேத மந்த்ரத்தை இணைத்துக் கொடுத்துள்ள அற்புதமான ஸ்துதி
இதை பாராயணம் செய்வதால் கணேசனை ஸ்துதி செய்வதோடு - வேத பாராயணம் செய்த நிறைவும் கிட்டும்
இதனை நித்யமும் பாராயணம் செய்தல் நலம்
ஸ்ரீகண்ட-தநய ஸ்ரீச ஸ்ரீகர ஸ்ரீதளார்ச்சித
ஸ்ரீவினாயக ஸர்வேச ஸ்ரீயம் வாஸய மே குலே
ஹாலாஹலம் என்னும் கொடிய விஷத்தை உண்டு, அதனை தனது கழுத்திலேயே நிறுத்திக் கொண்ட ஸ்ரீபரமேஸ்வரனின் புதல்வரே!, அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியே!, உபாஸிப்பவர்களுக்கு அஷ்ட-லக்ஷ்மிகளின் அருளைத் தருபவரே!, மஹா-லக்ஷ்மி நித்யவாசம் செய்யும் வில்வ பத்ரத்தால் பூஜிக்கப்படுபவரே!, தனக்கு மேல் ஒருவர் இல்லாத தலைவரே!, என்னுடைய குலத்தில் மஹாலக்ஷ்மி என்றும் நித்யவாசம் செய்யும்படி அருள வேண்டும். [ஸ்ரீயம் வாஸய மே குலே - வேத வாக்யம்]
கஜானன கணாதீச த்விஜராஜ விபூஷித
பஜே த்வாம் ஸச்சிதாநந்த பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே
யானை முகத்தோனே!, கணதேவதைகளின் தலைவனே!, சந்த்ரனால் அலங்கரிக்கப்பட்ட சிரஸை உடையவனே!, ஸச்சிதானந்த வடிவானவனே!, வேதங்களுக்குத் தலைவனே!, தங்களை ஸேவிக்கிறேன்.
[பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே - வேத வாக்யம்]
ணஷஷ்ட வாச்ய நாசாய ரோகாடவி குடாரிணே
க்ருணா பாலித லோகாய வனானாம் பதயே நம:
'ண' என்னும் எழுத்திலிருந்து ஆறாவது எழுத்தான 'ந' என்பதன் பொருளான 'இல்லாமை/ஏழ்மை'யை ஒழிப்பவரும், பிணிகள் என்னும் காட்டினை அழிப்பவரும், தனது தயையால் உலகைக் காப்பவரும், காடுகளுக்கு எல்லாம் தலைவராகவும் இருக்கும் கணபதிக்கு நமஸ்காரம்.
[வனானாம் பதயே நம: - வேத வாக்யம்]
தியம் ப்ரயச்சதே துப்ய மீப்ஸிதார்த ப்ரதாயினே
தீப்த பூஷண பூஷாய திசாம்ச பதயே நம:
நல்லறிவைக் கொடுப்பவரும், விரும்பியதை அளிப்பவரும், நல்லணிகளால் அலங்கரிக்கப்பட்டவரும், திசைகளின் தலைவருமான கணபதே! தங்களுக்கு நமஸ்காரம்.
[திசாம்ச பதயே நம: - வேத வாக்யம்]
பஞ்ச பிருஹ்ம ஸ்வரூபாய பஞ்ச பாதக ஹாரிணே
பஞ்ச தத்வாத்மனே துப்யம் பசூனாம் பதயே நம:
சத்யோஜாதன், வாமதேவன், அகோரன், தத்புருஷன், ஈசானன் ஆகிய ஐந்து பிரம்மங்களாக இருப்பவரும், அந்தணனைக் கொல்லுதல், கள் குடித்தல், தர்மம் செய்ய வைத்த பொருளைக் கொள்ளையடித்தல், பிறன்மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தல், மேற்சொன்ன 4 வித இழி செயல்களைச் செய்பவருடன் சகவாசம் கொள்ளுதல் ஆகிய ஐந்து மஹா பாதகங்களையும் அழிப்பவர், நிலம், நீர்,காற்று, தீ, வானம் ஆகிய ஐந்து பூதங்களின் வடிவாக இருப்பவரும், பசுக்களின் தலைவனுமாகிய உங்களுக்கு நமஸ்காரங்கள்.
[பசூனாம் பதயே நம: - வேத வாக்யம்]
தடித்கோடி ப்ரதீகாசதனவே விச்வ ஸாக்ஷிணே
தபஸ்வித்யாயினே துப்யம் ஸேநாநிப்யச்சவோ நம:
கோடி-மின்னலுக்கு இணையான ஒளி மிகுந்த உடலை உடையவரும், உலகனைத்திற்கும் ஸாக்ஷியாக இருப்பவரும், தபஸ்விகளை தன்மனதில் கொண்டவரும், படைகளுக்கெல்லாம் தலைவருமான தங்களுக்கு நமஸ்காரம்.
[ஸேநாநிப்யச்சவோ நம: - வேத வாக்யம்]
யே பஜந்த்யக்ஷரம் த்வாம் தே ப்ராப்னுவந்த்யக்ஷராத்மதாம்
நைகரூபாய மஹதே முஷ்ணதாம் பதயே நம:
அழிவற்றவரான உங்களை வழிபடுபவர்கள் தங்களுடன் கலந்துவிடுகின்றனர், அவ்வாறான சிறப்பை நல்குபவரும், பலவித ரூபங்களைக் கொண்டவரும், மிகப் பெருமை வாய்ந்தவருமான உங்களுக்கு நமஸ்காரம். [முஷ்ணதாம் பதயே நம - வேத வாக்யம்]
நகஜாவர புத்ராய ஸுர ராஜார்சிதாய ச
ஸகுணாய நமஸ்துப்யம் ஸும்ருடீகாய மீடுஷே
பார்வதீ தேவியின் சிறந்த புதல்வரும், தேவேந்திரரால் பூஜிக்கப்பட்டவரும், நற்குணங்கள் பொருந்தியவரும், எல்லோருக்கும் எப்போதும் இன்பங்களை அளிப்பவருமான தங்களுக்கு நமஸ்காரம்.
[ஸும்ருடீகாய மீடுஷே - வேத வாக்யம்]
மஹாபாத கஸங்காத மஹாரண பயாபஹ
த்வதீயக்ருபயா தேவ ஸர்வாநவ யஜாமஹே
பெரிய பாவக்கூட்டங்களிலிருந்து காப்பதற்கும், பெரிய போர்களில் ஏற்படும் அச்சத்தை எங்களிடமிருந்து அகற்றவும் தங்கள தயவினைக் காட்டுவீர்களாக. நாங்கள் உங்களை வணங்குகிறோம்.
[ஸர்வாநவ யஜாமஹே -வேத வாக்யம்]
நவார்ணவரத்ந நிகம பாதஸம்புடிதாம் ஸ்துதிம்
பக்த்யா படந்தியே தேக்ஷாம் துஷ்டோபவகணாதிப
கணாதிபரே!, ஸ்ரீ கணாதிபதயே நம: என்னும் மந்திரத்தில் ஆடங்கிய ஒன்பது ரத்னங்கள் போன்ற எழுத்துக்களை ஆரம்பத்திலும், வேதவாக்யங்களை முடிவிலும் கொண்ட இந்த ஸ்துதியை பக்தியுடன் படிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவதை அருளூவீராக
மிக மிக அருமையான பதிவு.
ReplyDeletewww.natarajadeekshidhar.blogspot.com
N.D. NATARAJA DEEKSHIDHAR
CHIDHAMBARAM SRI NATARAJAR TEMPLE TRUSTEE & PUJA