Had an opportunity to read this wonderful work on "my beloved" written by His devotee - Shri.Su.Ravi
"Avan Arulaale Aavn thaal vanangi..."
Its only by His grace one can write these lines..
Swamy Sharanam
V.Aravind Subramanyam
------------------------
சீலமுயர் வாழ்வையொரு யோகமென வேபயிலும்சாதகர்தமைக்காலனொரு போதுமணு காதபடி நாளுமவன்காத்தருளுவான்!நீலமுகி லாடுமலை சோலைபல சூழுமலைநீலிமலையாம்வாலியணு காதமலை வாழுமிறை பாதமலர்வாழ்த்துமனமே!
யானெனதி லாதநிலை யோடுபல காடுமலைஏறிவருவார்தான் அவர்தம் காவலென வீடுமனை வாசலவன்காத்தருளுவான்!யானைக ளுலாவுமலை, வானரமி லாதமலைஆளுமரசன்தேனமர் துழாய்புரளும் தோளழகன் பாதமலர்தேடுமனமே!
எண்ணியவெ லாமருளும் ஏழைகளின் தோழன் சிவபாலனிவனைநண்ணுமடி யார்களொரு போதும் நலியாதப்டிக்காத்தருளுவான்!திண்ணிய மரங்களுயர் கானகம் அடர்ந்தமலைகாந்தமலைமேல்விண்ணிலெழு ஜோதிமல ரானபர தேவனைவிரும்புமனமே!
பூரணை மணாளனவன், புஷ்கலையின் காதலனைப்போற்றுமடியார்தாரணியில் பேறு,புக ழோடு பல காலமுறக்காத்தருளுவான்!நாரணியும், ஆறணியும் நாயகனும் கூட உரு வாகிமலைமேல்பூரண நிலாவென உலாவுமவன் பொன்னடிகள்போற்றுமனமே!
மேதினியில் ஏதிலிகள் தோழனவன் மாமலையைத்தேடிவருவோர்சோதனை உறாதபடி, சோர்வுதழு வாதபடிக்காத்தருளுவான்ன்!வேதஒலி சூழுமலை, வேடுவரில் யோகியவள்வாழுமலைமேல்நாதவடி வானவனை, பூதகண நாயகனை நண்ணுமனமே !
No comments:
Post a Comment