மதுரை மீனாக்ஷியம்மன் கோவிலில் உள்ள சிற்பம் :
அம்பிகை மீனாக்ஷி குழந்தைவடிவில் மீனாக்ஷிமைந்தனுடன் (ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்) காட்சி தரும் அபூர்வ சிற்பம்
சுமார் 360 வருடங்களுக்கு முன்பு தோன்றிய ஸ்ரீ ஸ்வாமிகள், பிறந்த மறுநாள் முதலே மீனாக்ஷி மைந்தனாக ஏழு வயது வரை அம்பிகையின் கருவறைக்குள்ளேயே வளர்ந்து வந்தார். பின்னர் அவரது குருவால் ஆட்கொள்ளப்பட்டு பாரத தேசமெங்கும் பவனி வந்து, பலப்பல லீலைகள் புரிந்தார். ராமக்ருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், பரமஹம்ச யோகானந்தர், லாஹிரிமஹாசயர், ந்ருஸிம்மபாரதி ஸ்வாமிகள், ரமணர் போன்ற மஹான்களே போற்றும் மஹா புருஷராக விளங்கி சுமார் 300 ஆண்டுகள் வாழ்ந்து பன்னிரெண்டு சமாதிகள் கண்டு மீண்டும் மதுரை வந்தடைந்து அரசரடி எனுமிடத்தில் 1932ல் விஜய தசமி நாளில் மஹாசமாதியடைந்துள்ளார்.
இந்த மஹானைப் பற்றி முன்பு நான் நிறைய எழுதி இருக்கிறேன். முடிந்தால் கூடியவிரைவில் அவற்றையெல்லாம் திரட்டி மீண்டும் பதிவேற்றுகிறேன்.
-அரவிந்த் ஸுப்ரமண்யம்
No comments:
Post a Comment