Protected by Copyscape Website Copyright Protection

Thursday, February 1, 2018

மந்திர ஜபங்கள்

சந்திர க்ரஹணம் முடிந்தது... பலரும் ஜபங்கள் செய்து இறையருளை வேண்டி இருப்போம்.



பொதுவாக க்ரஹண காலத்தில் செய்யப்படும் ஜபமானது ஆயிரக்கணக்கான மடங்கு பலனளிக்கவல்லது என்று கூறப்பட்டுள்ள காரணத்தால் அது புரச்சரணத்துக்கு ஈடாக மந்திர ஸித்தி அளிக்க வல்லது.



இது ஒரு ஊக்கம் தரும் வழியேயன்றி அத்துடன் எல்லாம் முடிந்து விடுவதில்லை. க்ரஹண கால ஜபத்துடன் நிறுத்தி விடாமல் ஜபங்களைத் தொடர்ந்து செய்திடல் வேண்டும்.



ஆனால் மந்திர ஜபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். சிலருக்கு பலனடைய கொஞ்சம் நாட்கள் ஆகிறது. சிலருக்கோ வெகு நாட்கள் ஆகிறது. சிலருக்கோ பலனே கிடைப்பது இல்லை. மந்திர ஜபத்தில் பல விதிமுறைகள் உள்ளது. பலன் கிட்டாமல் போவதற்க்கு காரணம் - விதிமுறைகளை சரிவர பின்பற்றாமல் போவது தான்.



எனது ஹ்ருதயாரவிந்தம் எனும் நூலில் இது குறித்து விஸ்தாரமாக எழுதி இருக்கிறேன்.



உரு ஏற திரு ஏறும் எனும்படி - மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஜபம் செய்தாலே அது சக்தி பெறும்.



முதல் விதி ஆஹார நியமமும் ஆசாரமும் - மாமிச உணவும், பாக்கு, சிகரெட் , மது போன்றவை உபயோகிப்பதால் ஆயுள் முடியும் வரை எந்த மந்திரமும் பயன் தராது. பயன் தராதது மட்டுமல்ல - தோஷத்துக்கும் ஆளாக நேரும். பலப்பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் சொல்லப்படுவதைக் கேட்டு குழப்பமடையக் கூடாது. இவை அடிப்படை விதிகள். இது இல்லாமல் ஜபம் செய்வதை விட செய்யாமல் இருப்பதே நலம்.



எல்லாவற்றுக்கும் மேலாக குருவருள் முக்கியமாக வேண்டும். அது இல்லாமல் ஜபம் பலன் தராது. பலரும் குருவிடம் பிணக்கு, அவர் மனம் நோகும்படி செயல் ஆகியவை செய்துவிட்டு ஜபத்தில் ஈடுபடுகிறார்கள்.  இது ஓட்டை விழுந்த குடத்தில் தண்ணீர் விடுவதற்க்கு சமம்.



மந்திர ஜபம் சுலபமானதல்ல ! அதற்கான விதிமுறைகளை ஏற்க நாம் தயாராக இருந்தால் ஜபம் பலன் அளிப்பது நிச்சயம். அது இல்லாமல் ஜபம் செய்வதால் பலனில்லை.



இன்னும் சிலர் புத்தகங்களையும் பேஸ்புக்கில் வரும் மந்திர பீஜங்களையும் கண்டு ஜபம் செய்யப் புறப்படுகிறார்கள். நேரடியாக குருவின் உபதேசம் இல்லாமல், தானே மந்திரங்களை ஜபம் செய்பவர் இந்த ஜன்மத்திலேயே கர்ம சண்டாளர்கள் ஆகி, மறு ஜென்மத்தில் தெருநாயாக அலையும் நிலை வரும் என்பது தந்திரங்களின் கூற்று.



எனவே தகுந்த குருநாதனை நாடி அவர் அருள் பெற வேண்டி, அவர் மூலம் வழிகாட்டுதலை அடைதலே நலம்.



தரையில் படுக்கை, ப்ரம்மசர்யம், மௌனம், குருஸேவை, நித்யபூஜை, நித்ய தானம் , தெய்வ ஸ்துதி, த்ரிகால ஸ்னானம், தாழ்ந்த செயலை நீக்குதல், நைமித்டிக பூஜை, குருபக்தி-தெய்வ பக்தி, ஜபநிஷ்டை - இந்தப் பன்னிரெண்டுமே மந்திர ஸித்தியளிக்கும் தர்மங்கள்

-  குலார்ணவ தந்த்ரம்





No comments:

Post a Comment